தேர்தல் வியூக வல்லுநர்களின் (Psephologist) காலத்தில், தமிழ் ஊடகங்கள்

Authors

  • Mr. Thirunavukarasu S Ph. D. Research Scholar, Department of Defence & Strategic Studies, University of Madras, Chepauk Campus, Chennai, India.
  • Priyanga A University of Madras

Abstract

மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாக ஊடகங்கள் செயல்பட்டு வருகிறது. ஊடகங்களின் முக்கிய செய்திகளாகவும், வருவாயாகவும் அரசியல் கட்சிகளின் பங்கு இன்றியமையாதது. மரபார்ந்த ஊடகச் சூழலில் அரசியல் கட்சிகள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என்ற நிலையில் தொழில்முறை வல்லுநர்கள் என்ற புதிய பங்கேற்பாளர்கள் இணைந்துள்ளனர். தமிழ் ஊடகங்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதுமாக இவர்களின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது. கட்சியின் செய்தித்தொடர்ப்புத் துறையில் முற்றிலும் அயலவர்களான ஊடக தொழில்முறை வல்லுநர்களின் பங்கு பலனளித்தாளும் அவர்களின் அளிக்கும் செய்திகள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு செய்தி ஊடகத்தின் வழியாக மக்களிடம் வருவதற்கு முன் சார்பற்ற நிலை, உண்மைத்தன்மை, அறநிலை, நம்பகத்தன்மை போன்ற கூறுகளை நிலைபடுத்த வேண்டும். ஆனால் இன்றைய நவீன, தகவல் மற்றும் தொழில்நுட்ப யுகத்தில் செய்திகளின் அறநிலை கூறுகள் தவறவிடப்பட்டுள்ளது. அதற்கு உதாரணமே, ஒரு செய்தியை நடுநிலை நிருபரின் பார்வையில் பெற்று, அதனை பொதுமக்கள் என்ற பயனாளருக்கு கொடுக்கும் பணியில், இந்த தொழில்முறை வல்லுநர்களின் பணிகள் பொதுமக்களை வாக்காளர்களாகவும் செய்தியை கட்சியின் மற்றொரு பிரச்சார கருவியாகவும் மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் செய்தியின் தரமும், ஊடகத்தின் தரமும் பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணிகளையும், அதன் தாக்கங்களையும், அதனை கையாளும் முறைகள் குறித்தும் இந்த கட்டுரை பகுப்பாய்வு செய்ய உள்ளது. பொது மக்களின் நம்பிக்கையே ஊடகங்களின் அடித்தளம் என்ற நிலையில், இவ்வாறு அரசியல் கட்சிகயின் வல்லுநர்களின் தாக்கத்தால் வெளியாகும் ஒருதலைப்பட்சமான  செய்திகள்  மக்களிடம் ஒரு நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும். மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப செய்தியை ஊடகம் எவ்வாறு கையாள வேண்டி உள்ளது என்ற செயல்த் திட்டம்க்  குறித்தும் இந்த ஆய்வு விளக்க முற்படுகிறது.

Author Biography

Mr. Thirunavukarasu S, Ph. D. Research Scholar, Department of Defence & Strategic Studies, University of Madras, Chepauk Campus, Chennai, India.

  • UGC - JRF Holder

Downloads

Published

2026-09-30

How to Cite

S, T., & A, P. (2026). தேர்தல் வியூக வல்லுநர்களின் (Psephologist) காலத்தில், தமிழ் ஊடகங்கள். International Journal of Current Humanities & Social Science Researches (IJCHSSR) ISSN: 2456-7205, Peer Reviewed and Refereed Journal, 10(3), 6–16. Retrieved from https://journal.indiancommunities.org/index.php/ijchssr/article/view/325